மும்பையுடன் இன்று மோதல் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் சன் ரைசர்ஸ்

ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. சன்ரைசர்ஸ் முதல் போட்டியில் கேகேஆரிடம் போராடி தோல்வி அடைந்த நிலையில் இன்று சொந்த மண்ணில் வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ளது. மயங்க் அகர்வால், அபிஷேக், ராகுல் திரிபாதி, மார்க்ரம், கிளாசென் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. குறிப்பாக கிளாசென்,கேகேஆருக்கு எதிராக 8 சிக்சர் விளாசி மிரட்டினார். பவுலிங்கில் கேப்டன் கம்மின்ஸ், நடராஜன், புவனேஸ்வர்குமார், மார்கோ ஜான்சன், சுழலில் மயங்க் மார்கண்டே வலுசேர்ப்பர்.

மறுபுறம் மும்பை முதல் போட்டியில் குஜராத்திடம் தோல்வி அடைந்த நிலையில் இன்று வெற்றிக்கு குறிவைத்து களம் காண்கிறது. ரோகித்சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், கேப்டன் ஹர்திக்பாண்டியா, டிம் டேவிட், ஷம்ஸ் முலானி என நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் பும்ரா , ஜெரால்ட் கோட்ஸியை மட்டுமே நம்பி உள்ளது. தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுழற்பந்துவீச்சாளர் இல்லை. இரு அணிகளும் இதுவரை 21 முறை மோதி உள்ளது. இதில் மும்பை 12, ஐதராபாத் 9ல் வென்றுள்ளன. கடைசி 5 போட்டியில் மும்பை 4, ஐதராபாத் ஒன்றில் வென்றுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்துள்ள 7 போட்டியிலும் சொந்த மண்ணில் ஆடிய அணிகளே வென்றுள்ளன. இதனால் இன்று சன்ரைசர்ஸ் வெற்றிபெற்று அதனை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

The post மும்பையுடன் இன்று மோதல் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் சன் ரைசர்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: