ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடா சந்திப்பில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இயந்திரங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் விற்பனைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆலையில் ஏராளமான எண்ணெய்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. எனவே மொத்த எண்ணெயும் தீ பற்றி எறிந்த காரணத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டது.

இதை பற்றி தகவல் அறிந்த விஜயவாடா தீயணைப்பு படையினர் 4 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது அங்கு ஆலை இயங்குவதற்கான எந்த ஒரு அனுமதியும் உரிமையாளர் பெறவில்லை என்றும் கழிவு எண்ணையை சுத்திகரித்து அனுப்பிவைக்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த ஆலையின் உரிமையாளர் தற்போது தலைமறைவாகிவிட்ட நிலையில் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரும்புகை சூழ்ந்து கொண்ட காரணத்தால் அப்பகுதி முழுவதும் பொதுமக்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

The post ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: