ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதல்

ஈரோடு: புகழ்பெற்ற ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சத்தியமங்கலம் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. 15 அடி நீளத்திற்கு தயார் செய்யப்பட்ட குண்டத்தில் முதல் நபராக தலைமை பூசாரி இறங்கி விழாவை தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இரங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகாவிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர். விழாவை ஒட்டி 1400போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குண்டம் திருவிழாவில் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த உள்துறை செயலர் அமுதா பின்னர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டார்.

 

The post ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதல் appeared first on Dinakaran.

Related Stories: