உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில் புஷ்ப யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில் புஷ்ப யாகம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உத்திரமேரூர் பஜார் வீதில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபாலசாமி கோயிலில் புஷ்ப யாகம் நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது கோடைகாலம் துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டியும் மேலும் பருவநிலை மாற்றத்தின் போது ஏற்படும் புயல், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியும் புஷ்ப யாகம் நடைபெற்றது. முன்னதாக, வேணுகோபாலசாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் வேணுகோபாலசாமி எழுந்தருளினார். பின்னர் கோவில் வளாகத்தில் மூட்டப்பட்டிருந்த யாகசாலை வேள்வியில் யாக பூஜைகள் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து ரோஜா, முல்லை, மல்லி, சாமந்தி, தாழம்பூ, கனகாம்பரம், தாமரை, அள்ளி, சம்பங்கி, மனோரஞ்சிதம், போன்ற மலர்களும் துளசி, கவனம், வில்வம் போன்ற புனித இலைககள் என சுமார் ஒரு டன் மலர்களைக் கொண்டு புஷ்ப யாகம் நடைபெற்றது.  இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவின் சிறப்பாக செய்திருந்தனர்.

The post உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில் புஷ்ப யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: