சர்வதேச நடுவர்களுக்கான சிலம்ப பயிற்சி முகாம்

 

காஞ்சிபுரம், மார்ச் 25: சர்வதேச நடுவர்களுக்கான 3 நாள் சிலம்ப பயிற்சி முகாம் சென்னையில் உள்ள வேர்ல்ட் யூனிவர்சிட்டி சர்வீஸ் சென்டரில் நடைபெற்றது. சர்வதேச சிலம்ப கழகம் மற்றும் மலேசிய சிலம்பக் கழகம் இணைந்து நடத்திய சர்வதேச நடுவர்களுக்கான 3 நாள் சிலம்ப பயிற்சி முகாம் சென்னையில் உள்ள வேர்ல்ட் யூனிவர்சிட்டி சர்வீஸ் சென்டரில் நடைபெற்றது. முகாமிற்கு தபிஷா தேசிய தலைவர் ஏ.சாரப் மற்றும் மலேசிய தூதரகத்தின் இந்திய ஆலோசகர் ரஸாய்தி ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.

முகாமில் பல்வேறு மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உலக சிலம்ப கழகத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர். எம்.சுரேஷ், தலைவர் எஸ்.சந்திரன், தொழில்நுட்பக் குழு தலைவர் பி.ரவீந்திரன் மற்றும் தென்கிழக்கு ஆசிய சிலம்ப தலைவர் ஏ.சிவக்குமார் மற்றும் மலேசிய சிலம்ப கழகத்தின் துணைத் தலைவர் கே.கமலநாதன் ஆகியோர் முன்னிலையில், நடுவர்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் சர்வதேச சிலம்ப கழகத்தின் இந்திய பிரதிநிதிகளாக காஞ்சி பு.செந்தில்நாதன் மற்றும் தஞ்சை எஸ்.புவனேஸ்வரி இருவரையும் சர்வதேச சிலம்ப கழகத்தின் செயலாளர் டாக்டர் சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் இனிவரும் காலங்களில் இந்தியாவில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நிகழ்வுகளும் இவர்களின் இருவரும் தலைமையிலேயே நடைபெறும் என கூறினார்.

The post சர்வதேச நடுவர்களுக்கான சிலம்ப பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: