மாநில எல்லையில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஓசூர், மார்ச் 24: ஓசூர் அருகே, தமிழக எல்லை சோதனை சாவடியில், கலெக்டர் சரயு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து பணம், மதுபானங்கள் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை, தமிழகத்திற்கு கொண்டு வருவதை தடுக்கும் பொருட்டு மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளன. தமிழக எல்லை பகுதியான ஓசூரில் ஜூஜூவாடி, பாகலூர், கொத்தகொண்டபள்ளி, தளி, அஞ்சட்டி உள்ளிட்ட இடங்களில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ேநற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருடம், தேர்தல் அதிகாரியுமான சரயு தலைமையில் அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அண்டை மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் எவ்வாறு சோதனை செய்யப்படுகிறது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். சோதனை சாவடியில் இருந்த பதிவேடுகளை ஆய்வு செய்த கலெக்டர், கண்காணிப்பு பணிகளை விழிப்போடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

The post மாநில எல்லையில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: