18 வயது நிரம்பிய கல்லூரி மாணவ, மாணவிகள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்

*விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் வேண்டுகோள்

நாகர்கோவில் : கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி கிராமிய கலை நிகழ்ச்சிகளின் வாயிலாக கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நவீன மின்னணு வாகனத்தின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கிராமிய கலைக்குழுவினர் நேற்று (22ம்தேதி) நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரோஜாவனம் கல்லூரி மற்றும் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லுரி மாணவ மாணவிகளிடையே 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரத்தினை மேற்கொண்டனர். தொடர்ந்து சுங்கான்கடை பேருந்து நிறுத்தம் பகுதியிலும், கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வாகனம் மூலமாகவும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி மாணவிகள் வாக்காளர் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர்.

The post 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவ, மாணவிகள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: