பாமக வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம்: தர்மபுரி தொகுதியில் களமிறங்கும் செளமியா அன்புமணி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் அரசாங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், தற்பொழுது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு மாற்றாக பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா தருமபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தருமபுரி பாட்டாளி மக்கள் கட்சியினர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பாமக வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம்: தர்மபுரி தொகுதியில் களமிறங்கும் செளமியா அன்புமணி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: