பூட்டிய வீட்டில் கட்டுக்கட்டாக சாக்குமூட்டையில் ரூபாய் நோட்டு: ரூ.9 கோடி பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே பூட்டப்பட்டு கிடந்த வீட்டில் இருந்து ரூ.9 கோடி மதிப்பிலான செல்லாத ரூ.2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள குருபுரம் பகுதியில் உள்ள ஒரு பூட்டப்பட்டு கிடந்தது. அந்த வீட்டில் சாக்கு மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அம்பலத்தரை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ஏராளமான சாக்குமூட்டைகளில் கட்டுக்கட்டாக செல்லாத ரூ.2000 நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களை பரிசோதனை செய்த போது மொத்தம் ரூ. 9 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. உடனே அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் சம்பந்தப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தது தெரியவந்தது. செல்லாத அந்த நோட்டுக்களை எதற்காக அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூட்டிய வீட்டில் கட்டுக்கட்டாக சாக்குமூட்டையில் ரூபாய் நோட்டு: ரூ.9 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: