பிஎஸ்எல் டி20 கிரிக்கெட்; இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சாம்பியன்.! முல்தான் சுல்தானை வீழ்த்தியது

கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 கிரிக்கெட் தொடரில் முல்தான் சுல்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கராச்சி நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஸ்வான் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கான் 57 ரன் எடுத்தார். இப்திகார் அகமது 20 பந்துகளில் 32 ரன் எடுத்தார். இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் இமாத் வாசிம் 5 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி களமிறங்கியது.

துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் 32 பந்துகளில் 50 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். அஸம் கான் 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணி முதல் நான்கு பந்துகளில் 7 ரன்கள் எடுத்தது. 5வது பந்தில் நஸீம் ஷா, 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஹுனைன் ஷா பவுண்டரி விளாசி வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பையை கைப்பற்றியது. கடந்த மூன்று சீசன்களாக இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான் அணி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பிஎஸ்எல் டி20 கிரிக்கெட்; இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சாம்பியன்.! முல்தான் சுல்தானை வீழ்த்தியது appeared first on Dinakaran.

Related Stories: