தேர்தல் பணியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள், ஜான்சன், சூர்யபிரகாஷ், சுகுணா, மகாதேவி, அலெக்ஸ், பொன்னுரங்கம், அண்ணாதுரை, டில்லி, ஷாலின், பாலு, தமிழ்ச்செல்வன், ஜெகன், குமார், மணிகண்டன், மோகன், கருணன், மகளிர் பிரிவு நிர்வாகிகள சரோஜினி, வாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சந்திரன், ஜீவா, எம்ரோஸ், கிரிஸ்டோபர், பிரபு, கிள்ளிவளவன், மோகன், மாரிமுத்து ஆகியோர் வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பணியில் இருந்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும், இதய நோய், புற்றுநோய், காசநோய் மேலும் உடலில் பலத்தரப்பட்ட நோய் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கர்ப்பமுற்ற பெண் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மருத்துவ அறிக்கையை பெற்று விளக்களிக்க வேண்டும். இதற்கென தனி அலுவலர்களை நியமித்து அவர்களை அலைக்கழிப்பு செய்யாமல் உடனுக்குடன் தீர்வுகான வேண்டும். அரசு ஊழியர்களும் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.

ஏற்கெனவே உத்திரபிதேச மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவர் தேர்தலில் நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்து மீண்டும் அரசு பணிவழங்க உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு வழங்கி உள்ளதாக பத்திரிகை வாயிலாக அறிந்தோம், இதனை பின்பற்றி விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும், வெற்றி பெற்றால் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், தோல்வி அடைந்தால் மீண்டும் அதே பதவியில் பணியில் சேரலாம் என்ற உத்தரவை தேர்தல் ஆணையும் பிறப்பிக்கவேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

The post தேர்தல் பணியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: