தடையற்ற மும்முனை மின்சார விநியோகம்

ராசிபுரம், மார்ச் 17: புதுப்பாளையத்தில் சீரான தடையற்ற மும்முனை மின்சார விநியோகத்தை எம்பி, கலெக்டர் தொடங்கி வைத்தனர். நாமக்கல் மாவட்டம், பட்டணம் பேரூராட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்பி, கலெக்டர் உமா தலைமையில், புதுப்பாளையம் 22 கி.வோல்ட் பீடரை கிராமபுற வகைப்பாட்டில் இருந்து, நகர்புற வகைப்பாடாக தரம் உயர்த்தி 24 மணி நேரமும், தொடர்ந்து சீரான தடையற்ற மும்முனை மின்சார விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்பி கூறியதாவது: முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

வெண்ணந்தூர் ஒன்றியம், கீழுர், மேலூர், கெடமலை ஆகிய கிராமங்களில் வசித்து வரும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த சாலை அமைக்கும் பணி, ₹139.654 கோடி மதிப்பில் 31.07 கி.மீட்டருக்கு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ₹3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டி தரப்படவுள்ளது. புதுப்பாளையம் மின்சார பாதைக்கு கிராமங்கள் அதிகமாக விவசாயிகளைக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக கீழூர், மேலூர் பகுதிகளில் பழங்குடியினர் மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கை புதுப்பாளையம் மின்சார பாதை பீடரை 24 மணி நேரம் மும்முனை மின்சார பாதையாகவும், கிராம வாகைபாட்டில் இருந்து நகர்புற வகைப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்பதாகும்.

இன்றையதினம் புதுப்பாளையம் மின்சார பாதை மும்முனை மின்சார பாதை, ஊரக மின்சார பாதையில் இருந்து நகர்ப்புற மின்சார பாதையாகவும் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த சீரிய முயற்சிகள் மேற்கொண்ட முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், கலெக்டர் மின்சார துறை அலுவலர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி கூறினார். தொடர்ந்து, பட்டணம் கிளை நூலகத்தில் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டு, நூலகத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை, புத்தகங்களின் இருப்பு எண்ணிக்கை உள்ளிட்டவற்றை நூலக பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் ஒன்றிய குழுத் தலைவர் ஜெகநாதன், வெண்ணந்தூர் ஒன்றிய அட்மா குழு தலைவர் துரைசாமி, பட்டணம் பேரூராட்சி துணைத் தலைவர் நல்லதம்பி, மின்வாரிய அலுவலர்கள், காமராஜ், ரவி, ராஜேந்திரன், கலைவாணன், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

The post தடையற்ற மும்முனை மின்சார விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: