சிறுவாச்சூர் மதுர காளியம்மன் ேகாயிலில் பக்தர்களுக்கு மோர்

 

பெரம்பலூர்,மார்ச்16: வெப்பத்தின் தாக்கம் எதிரொலியால் அரசின் உத்தரவுப்படி சிறு வாச்சூர் மதுர காளியம்மன் ேகாயிலில் நேற்று பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. மேலும் கோயில் வளாகத்தில் தேங்காய் நார் தரைவிரிப்பு அமைக்கப்பட்டது. தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் உத்தரவுகளின் படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான கோயில்களில் பக்தர்களுக்கு மோர் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் செயல்அலுவலர் அசன்னாம்பிகை ஏற்பாட்டின்படி பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. நேற்று கோயிலுக்கு பெரம்பலூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மோர் வழங்கப்பட்டது. மேலும் செருப்பு அணியாமல் கோயில் வளாகத்திற்குள் வரும் பக்தர்களின் நலனுக்காக கோயிலில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தரைத் தளத்தின்மீது தேங்காய் நார் தரை விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது.சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் வாரத்தின் திங்கள் வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் மட்டுமே நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிறுவாச்சூர் மதுர காளியம்மன் ேகாயிலில் பக்தர்களுக்கு மோர் appeared first on Dinakaran.

Related Stories: