வைத்தீஸ்வரன்கோவிலில் ரயில் நிலையத்தில் உழவன், ராமேஸ்வரம் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்

 

சீர்காழி,மார்ச் 16: வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையத்தில் உழவன், ராமேஸ்வரம் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீசுவரன்கோயிலில் தனியார் திருமண மண்டபத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாதாந்திர கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துத்துடன் தொடங்கியது. சங்கத்தின் தற்காலிக தலைவர் ராமபத்திரன் தலைமை வகித்தார். செயலர் கில்பர்ட் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதலாவதாக மறைந்த இரு உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தாமதமின்றி நான்கு விழுக்காடு அகவிலைப்படி வழங்கிய தமிழக முதல்வரைப் பாராட்டி நன்றி தெரிவித்தும், ஆன்மிக பிரசித்தி பெற்ற வைத்தீசுவரன்கோயிலில் உழவன், ராமேசுவரம் ரயில்கள் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க ரயில்வே நிருவாகத்தை கேட்டுக்கொண்டும், கடைவீதியில் உள்ள போக்குவரத்து இடையூறு ஆக்கிரமப்புகளை நீக்க. மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் நடராசன் நன்றி கூறினார்.

The post வைத்தீஸ்வரன்கோவிலில் ரயில் நிலையத்தில் உழவன், ராமேஸ்வரம் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: