பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு பயிற்சி முகாம்

 

கிருஷ்ணகிரி, மார்ச் 16: கிருஷ்ணகிரியில், பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை பணியிடத்தில் உறுதி செய்தல், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புகார் அளிக்கும் நடைமுறை சட்டம் குறித்த பயிற்சி நடந்தது. முகாமினை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பேசுகையில், ‘பெண்கள் சமூகத்தில் முன்னேற்றமடைந்து வருவது குறித்தும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புகார் அளிக்கும் நடைமுறை சட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனங்கள், தூய்மையான முறையில் பராமரிக்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட தலைப்புகளில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது,’ என்றார்.
நிகழ்ச்சியில்இ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரணவன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதன்மை வழக்கறிஞர் ரவிச்சந்திரன், குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள், இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பினர்கள், நன்னடத்தை அலுவலர் மற்றும் குழந்தைகள் அவசர உதவி மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: