மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36 லட்சத்தில் அங்கன்வாடி மையங்கள்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், கள்ளபிரான்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் இடிந்தநிலையில் அடிப்படை வசதியின்றி சீமை ஓடு கட்டிடத்தில் இயங்கி வந்தது. அந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழு உறுப்பினர் ஒப்பில்லால் சத்யசாய் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சித்ர தனசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தனர். இதற்கு முன்னதாக இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் தொகுதி மேம்பாட்டு நிதி தலா ரூ.11 லட்சம் மதிப்பில் கிணார் ஊராட்சி இருசாமநல்லூர், எல்என் புரம் ஊராட்சியில் உள்ள பாத்தூர் ஆகிய 2 கிராமங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்களும் திறக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் திமுக ஒன்றிய செயலாளர் சத்யசாய், மாவட்ட கவுன்சிலர் ராஜாராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி அரசு, சந்திரபாபு, ஒன்றியக் குழு உறுப்பினர் லதா மனோகர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36 லட்சத்தில் அங்கன்வாடி மையங்கள்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: