குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குகள் 19ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிரான வழக்கு வரும் 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லீம் லீக், திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்து விட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்து, அதை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியோர் தரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி விட்டால் அதுதொடர்பான மனுக்களை விசாரிப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே இந்த வழக்குகள் அனைத்தையும் உடனடியாக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வழக்கை வரும் 19ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தார்.

The post குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குகள் 19ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: