தொடர் இழுபறிக்கு முற்றுப்புள்ளி: பீகாரில் நிதிஷ்குமாருக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு.! 17 தொகுதிகளில் பாஜ போட்டி

பாட்னா: பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாருக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பாஜ 17, சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களில் களம் இறங்குகின்றன. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சில மாநிலங்களில் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா, பஞ்சாப்பில் இன்னும் இழுபறி நீடித்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கிடையில் 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் பாஜ வெளியிட்டு கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

இந்தநிலையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வான், ஜிதன்ராம் மஞ்சி ஆகியோரின் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜ போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தநிலையில் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. அதன்படி அங்கு மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜ 17ல் போட்டியிடுகிறது. அதேபோல் ஐக்கிய ஜனதாளத்திற்கு 16, சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்திக்கு 5, உபேந்திரா குஸ்வாகா மற்றும் ஜிதன்ராம் மஞ்சி கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

The post தொடர் இழுபறிக்கு முற்றுப்புள்ளி: பீகாரில் நிதிஷ்குமாருக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு.! 17 தொகுதிகளில் பாஜ போட்டி appeared first on Dinakaran.

Related Stories: