பாலக்காட்டில் எம்பி தொகுதி நிதி ரூ.2.26 கோடியில் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நிறைவு விழா

 

பாலக்காடு, மார்ச் 14: பாலக்காடு நாடாளுமன்ற எம்.பி, வி.கே கண்டன் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து 2 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவீட்டில் பாலக்காடு நகராட்சி பஸ் நிலையத்தின் திட்டப்பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து இதனை பார்வையிட வந்த எம்.பி  கண்டனுக்கு பாலக்காடு பகுதி பொது மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்வேறு தடைகளை தாண்டி நகராட்சி பஸ் நிலைய பணிகள் நிறைவடைந்தன. பாலக்காடு நகராட்சி பஸ் நிலையம் அருகே பாலக்காடு டவுன் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பிட் லைன்கள் அமைக்கும் பணிகளுக்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இவற்றின் பணிகளும் விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தென்னக ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகளும் முழுமையடைந்தால் பாலக்காடு நகரம் பெரும் மாறுதல்களை அடையும். இதனால் அதிகளவில் மக்களும் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இதன் துவக்க நிகழ்ச்சிக்கு சதாம் குசைன் தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க தலைவர் சித்திக், கவுன்சிலர்கள் செய்து முகமது மீரான் பாபு, சுபாஷ், கிருஷ்ணன், ஹசனுப்பா, சஜித், கஜா, நவுசாத், ஷரீப், ஆஷிக், சுல்பி, ஹசான் முகமது ஹாஜி ஆகியோர் உட்பட பயணியர் சங்கத்தினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

 

The post பாலக்காட்டில் எம்பி தொகுதி நிதி ரூ.2.26 கோடியில் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: