மாநகராட்சி 16-வது வார்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்ட கட்டுமான பணிகள்

 

ஈரோடு, மார்ச் 14: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுமான பணியினை மேயர் நாகரத்தினம் துவக்கி வைத்தார். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 1ம் மண்டலம் 16-வது வார்டு சிந்தன் நகரில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு சிந்தன் நகரில் நேற்று ரேஷன் கடை அமைப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு 1ம் மண்டல தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தலைமை வகித்து, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி முன்னிலையில் ரேஷன் கடை அமைக்கும் கட்டுமான பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை 16வது வார்டு கவுன்சிலர் ஈபி ரவி செய்திருந்தார். உடன் மாநகராட்சி அதிகாரிகள், கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.10 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமரா: ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி 16வது வார்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமரா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதன் துவக்க விழா 16வது வார்டுக்கு உட்பட்ட வைராபாளையத்தில் நேற்று நடந்தது. இதில், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தலைமை வகித்து, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் முன்னிலையில் துவக்கி வைத்தார். இதையடுத்து 16வது வார்டில் 15 இடங்களில் 42 சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை 16வது வார்டு கவுன்சிலர் ஈபி ரவி செய்திருந்தார். இதில், மண்டல தலைவர் பழனிசாமி, திமுக பகுதி செயலாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post மாநகராட்சி 16-வது வார்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்ட கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: