நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து 84 குழுக்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம், மார்ச் 14: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஆலந்தூர், பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 84 குழுக்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலந்தூர், பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 36 பறக்கும் படை குழு, 36 நிலையான கண்காணிப்பு குழு, 8 வீடியோ கண்காணிப்பு குழு, தேர்தல் கணக்கு குழு, கண்காணிப்பு குழு, தேர்தல் கண்காணிப்பு குழு என மொத்தம் 84 குழுக்களுக்கான பணிகள் குறித்த பயிற்சியும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மேற்படி குழுக்களின் பணி மற்றும் பொறுப்புகள் குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பார்த்தசாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) பாலாஜி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து 84 குழுக்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: