அவளூர் தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

*காவேரிப்பாக்கம் அருகே பரபரப்பு

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அருகே அவளூர் தேசிய நெடுஞ்சாலை பஸ்நிறுத்தம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது அவளூர் பஸ்நிறுத்தம். இப்பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக தேசிய நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி பொது மக்கள் விபத்துக்களளை தடுக்க, மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தாக கூறுகின்றனர்.

மேலும் இதுதொடர்பாக கலெக்டர், மற்றும் எம்பி, எம்எல்ஏ என நேரில் சென்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்நிலையில் அவளூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று தேசிய நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மேம்பால பணிகள் தொடங்காமல், இங்கு பணிகள் தொடங்கக் கூடாது என 200-ககும் மேற்பட்டோர் திடீரனெ சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு, இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், லட்சுமிபதி, மற்றும் நெமிலி தாசில்தார் பாலசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நான்கு மணிநேரம் நடைபெற்ற போராட்டத்தில் உடன்பாடு ஏற்படாத நிலையில், நீதி மன்றத்தை நாட அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இதில் போக்குவரத்து பாதிப்பு ஏதும் இல்லை. மேலும் தங்கள் கோரிக்கையை ஏற்காத காரணத்தால், அவளூர் கிராம மக்கள் சார்பில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக காவேரிப்பாக்கம், ஓச்சேரி, அவளூர், பெரும்புலிப்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அவளூர் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post அவளூர் தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: