பாமகவுக்கு 8 தொகுதிகள்?.. பாஜக கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ்.க்கு தலா 4 தொகுதி?

சென்னை: பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். பேச்சுவார்த்தை நடத்தினர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் நள்ளிரவில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜகவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஓ.பி.எஸ்.ஸுடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனும் உடன் இருந்தனர். நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது.

பின்னர் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; பாஜக கூட்டணியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி. இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாகத் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்; வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. ஒரே தொகுதியை கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்பதால் அது குறித்து பேசி சரி செய்து போட்டியிடுவோம் இவ்வாறு கூறினார்.

டிடிவி தினகரன் பேசிய போது; பாஜக கூட்டணியில் நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை, எந்த நிர்பந்தமும் எனக்கு கிடையாது. தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம், தொகுதிகள் இறுதியானதும் தெரிவிக்கிறேன். அமமுக போட்டியிடசின்னம் தொடர்பாக எந்த நிர்பந்தமும் இல்லை, அச்சுறுத்தலும் இல்லை. குக்கர் சின்னம் வேண்டுமென உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். அமமுக வளர்ந்து வரக்கூடிய கட்சி, நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதைத் தான் விரும்புகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அமமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை அண்ணாமலையிடம் கொடுத்துள்ளோம் இவ்வாறு கூறினார்.

அதேபோல் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 8 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க பாஜக முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாமகவுடன் பேச்சுவார்த்தையை முடித்த பிறகு தேமுதிகவை அனுக இருப்பதாகவும் பாஜக தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

The post பாமகவுக்கு 8 தொகுதிகள்?.. பாஜக கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ்.க்கு தலா 4 தொகுதி? appeared first on Dinakaran.

Related Stories: