வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்: புதிரை வண்ணார் இன மக்கள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

 

பெரம்பலூர்,மார்ச்13: பெரம்பலூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் இன மக்களின் விவரம் குறித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் முன்னோடி முயற்சியாக புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் புதிரை வண்ணார் இன மக்களின் விவரத்தினை கணக்கெடுப்பு செய்ய சென்னை இப்சோஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்னை ஆதிதிராவிடர் நலத்துறையால் அனுமதி வழங் கப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் கணக் கெடுப்புக்குழு ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று தகவல்களை சேகரிக்க உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் புதிரை வண்ணார் இன மக்கள் நலத்திட்ட உதவிகள் பெற பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலகத்தினை அணுகிப் பயன் பெறலாம் என மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்: புதிரை வண்ணார் இன மக்கள் கணக்கெடுப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: