சாகித்ய அகாடமி விருது பெரும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : சாகித்ய அகாடமி விருது பெரும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் இலக்கியத்துறைக்கு என்று வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரிய விருது சாகித்ய அகாடமி விருது ஆகும். இதில் மொழி பெயர்ப்பாளர்களுக்கு என்று தனியாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 24 மொழிகளில், வெவ்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அந்த வரிசையில் மமாங் தய் என்பவர் எழுதிய நாவலை தமிழில் ‘‘கருங்குன்றம்” என்ற பெயரில் மொழி பெயர்த்ததற்காக கண்ணையன் தட்சிணாமூர்த்திக் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட The Black Hill நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு எனது பாராட்டுகள்,”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதே போல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.ஃபிரெஞ்சுப் பாதிரியாரின் அனுபவத்தையும் பழங்குடி பண்பாட்டையும் விளக்கும் (THE BLACK HILL) எனும் நாவலை கருங்குன்றம் என்ற தலைப்பில் மொழி பெயர்த்து சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு. கண்ணையன் தட்சிணா மூர்த்தியின் ஆக்கப்பூர்வமான எழுத்துப் பணிகள் தொடர எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

The post சாகித்ய அகாடமி விருது பெரும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: