அமைச்சர் ரகுபதி பேச்சு திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்

 

திருமயம்,மார்ச் 12: திருமயம் அருகே அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 91 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் திட்டாணி அய்யனார் கோயில் சிவராத்திரி மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 91 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என பந்தயம் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.

முதலாவதாக நடத்தப்பட்ட பெரிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி, 2ம் பரிசு விராமதி தையல்நாயகி, 3ம் பரிசு தானாவயல் வெங்கடாசலம், 4ம் பரிசு திருச்சி அன்பில் நாச்சியார் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இதனை தொடர்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் 34 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தயமானது இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

இதில் முதல் பரிசை பறவை சோலைமுத்து, அரண்மனைபட்டி குறுந்தமூர்த்தி, 2ம் பரிசு ஓணாங்குடி எல்லா புகழும், நெய்வாசல் மணி மாயாண்டி, 3ம் பரிசு கோட்டையூர் அருணகிரி, கொத்தமங்கலம் சேகர், 4ம் பரிசு ஈழக்குடிப்பட்டி சங்கப்பன், மாவூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன. இறுதியாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 44 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் பந்தயம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை ரத்னாகோட்டை அமரன் பிரதர்ஸ், சுண்ணாம்பிருப்பு காளியம்மை, 2ம் பரிசு விராமதி சாதனா, கேகே பட்டி பொன்னையா, 3ம் பரிசு கோட்டையூர் சிதம்பரம், கானாடுகாத்தான் சோலை ஆண்டவர், 4ம் பரிசு சொக்கலிங்கம்புதூர் ராமன், ஆத்தங்குடி கண்ணாத்தாள் ஆகிருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன. பந்தயம் நடைபெற்ற நெய்வாசல் சாலை பகுதியில் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நெய்வாசல் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post அமைச்சர் ரகுபதி பேச்சு திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: