காவிரி குடிநீர் விநியோகம் செய்ய மறுப்பு எழுமாத்தூர் ஊராட்சி நிர்வாகம் மீது புகார்

 

ஈரோடு, மார்ச் 12:காவிரி குடிநீர் விநியோகம் செய்யாமல் எழுமாத்தூர் ஊராட்சி நிர்வாகம் தங்களது பகுதியை புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பபட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, மொடக்குறிச்சி தாலூகா, எழுமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்விழா நகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த பல மாதங்களாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது.

இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தெருக்களில் தூய்மை பணிகள் மேற்கொள்வது இல்லை. வீடுகளில் சேகரித்த குப்பைகளை பெற தூய்மை பணியாளர்கள் வருவதில்லை. சாக்கடை வசதி, சமுதாயக் கூடம், அங்கன்வாடி உள்ளிட்ட எந்த அடிப்படை கட்டமைப்பையும் பல ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்காமல் உள்ளனர்.

இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இது தொடர்பாக உரிய ஆய்வு செய்து பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post காவிரி குடிநீர் விநியோகம் செய்ய மறுப்பு எழுமாத்தூர் ஊராட்சி நிர்வாகம் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: