பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் நேற்று நடந்தது.  இதில், மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட பொருளாளர் சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நிர்வாகி சின்னத்தம்பி கலந்துகொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில், காலதாமதம் இன்றி நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு, தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் நியாயமான புதிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

மாநில தேர்வாணை குழு மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் வெகு தூரத்தில் பணி மாற்றப்படுவதால், பெண் ஊழியர்கள் உட்பட பலர் சிரமப்படுகின்றனர். எனவே, அருகாமையிலே அவர்களுக்கு பணி அமர்த்தப்பட வேண்டும். சங்கங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்வர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்பட 400க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: