செந்துறை ஒன்றிய பகுதியில் ரூ. 11.15 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்

 

அரியலூர், மார்ச் 11: அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.11.15 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார். இதில் செந்துறை ஊராட்சி ஒன்றியம், பாளையக்குடி ஊராட்சியில் ரூ.7,87,000 மதிப்பில் ஆதிக்குளம் ஏரி ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்தும் பணி, கிளிமங்கலம் கிராமத்தில் 12,70,000 மதிப்பில் நியாயவிலை கட்டிட பணி, வாளரக்குறிச்சி கிராம ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2,69,000 மதிப்பிலும், கிளிமங்கலம் வடக்குத்தெருவில் ரூ.6,62,000 மதிப்பிலும், வாளரக்குறிச்சி நடுத்தெருவில் ரூ.8,24,000 மதிப்பிலும், வாளரக்குறிச்சி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.1,05,000 மதிப்பில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

 

The post செந்துறை ஒன்றிய பகுதியில் ரூ. 11.15 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: