ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, மார்ச் 11: ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்த கிருஷ்ணா கால்வாயை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திர – தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டு தோறும் ஜுலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும்.

இந்த தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாய் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து தொம்பரம்பேடு பகுதி வரை கால்வாயின் இருபுறங்களும் சேதமடைந்து காணப்பட்டது. இதை தற்போது நீர்வளத்துறை அதிகாரிகள் சீரமைத்து வருகிறார்கள். அதோடு வேலகாபுரம் பகுதியில் இருந்து ஒதப்பை கிராமம் வரையும் கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதையும் வரும் ஜூலை மாதம் தண்ணீர் திறப்பதற்குள் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: