சர்தார் வல்லபாய் படேலின் ஆசிரமத்தில் ராகுல் காந்தி

தபி: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஆசிரமத்துக்கு நேற்று சென்ற ராகுல் காந்தி அங்கு உள்ள படேலின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டம் பர்தோலியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நிறுவிய ஸ்வராஜ் ஆசிரமத்துக்கு சென்று பார்த்தார். படேலின் உருவபடத்துக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி, அங்கு இருந்த சுதந்திர போராட்ட வீரர்களை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் தபி மாவட்டத்தில் உள்ள வியாரா என்ற இடத்துக்கு சென்று அங்கு பழங்குடியினர் மத்தியில் பேசினார். பின்னர் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.யாத்திரையின் போது கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,‘‘குஜராத்தில் 4 நாட்கள் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி மொத்தம் 400 கிமீ தூரம் பயணித்துள்ளார். நேற்றுடன் குஜராத் கட்ட யாத்திரை முடிவடைந்தது. நாளை மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பாரில் இருந்து ஒற்றுமை நீதி யாத்திரை மீண்டும் தொடங்குகிறது’’ என்றார்.

The post சர்தார் வல்லபாய் படேலின் ஆசிரமத்தில் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: