நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.330.42 கோடி செலவிலான திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.330.42 கோடி செலவிலான திட்டப்பணிகனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சோளிங்கர், ஆரணி, திருவத்திபுரம், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய நகராட்சிகளில் தினசரி சந்தை மேம்பட்டு பணிகள், நீர்நிலை மேம்பாட்டு பணி என ரூ.17 கோடியே 96 லட்சம் செலவிலான 9 பணிகள் மற்றும் பட்டுக்கோட்டை, செங்கோட்டை, திருச்செந்தூர், மேலூர் பகுதிகளில் ரூ.26 கோடியே 59 லட்சம் செலவில் 14 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அண்ணாநகர் மண்டலம், வார்டு-98ல் உள்ள ஓட்டேரி கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2வது தெருவையும், கீழ்ப்பாக்கம் தோட்டம் தெருவையும் இணைக்கும் இடத்தில் இருந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதியதாக கட்டப்பட்டுள்ள பாலம், தண்டையார்பேட்டையில் இறங்குப்பந்து உள்விளையாட்டு அரங்கம் என மொத்தம் ரூ.330.42 கோடி மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் பகுதியில் ரூ.18 கோடி செலவில், கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பழைய மாமல்லபுரம் சாலையில் தரமணி லிங்க் சாலை முதல் நூக்கம்பாளையம் சாலை வரை உள்ள பகுதிகளுக்கு ரூ.98 கோடியே 28 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம் என மொத்தம் ரூ.195 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், துறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* டாக்டர் பத்ரிநாத் சாலை
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையை நிறுவிய டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தை கவுரவிக்கும் வகையில் நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலை முதல் வாலேஸ் கார்டன் வரை உள்ள பைகிராப்ட்ஸ் கார்டன் சாலைக்கு மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் சாலை என்று பெயர் மாற்றி் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The post நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.330.42 கோடி செலவிலான திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: