மதுரை : தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் பாபி சிம்ஹா தொடர்ந்த வழக்கில் போலீசார் தரப்பில் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மணப்பாக்கத்தைச் சேர்ந்த நடிகர் பாபி சிம்ஹா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கொடைக்கானல் பேத்துப்பாறையில் எனக்கு சொந்தமான வீட்டுமனை உள்ளது. அதில் வீடு கட்டி தருவது தொடர்பாக உசேன் என்பவர் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் ஒப்பந்தப்படி நான் பணம் தராமல் இழுத்தடித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்து, ரூ.10 லட்சம் மதிப்புள்ள கட்டுமானப் பொருட்களை தர மறுப்பதாகவும் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் என் மீதும், கேஜிஎப் பட வில்லன் நடிகர் ராமச்சந்திர ராஜூ ஆகியோர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கொடைக்கானல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. என் மீதான புகாரை திரும்ப பெறுவதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் தாக்கல் செய்ய புகார்தாரர் தயாராக உள்ளார். நாங்கள் சமரசமாக உள்ளோம். எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி சத்திகுமார் சுகுமாரா குரூப், இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து கொடைக்கானல் போலீசார் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
The post கொலை மிரட்டல் விடுத்த வழக்கை ரத்து செய்யுமாறு நடிகர் பாபி சிம்ஹா மனு appeared first on Dinakaran.