ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

 

பெரம்பலூர், மார்ச் 9: பெரம்பலூர், ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது. ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் சிவசுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் டாக்டர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், பெண்களுக்கு அறிவும், திறமையும், நற்பண்பும் நற்சிந்தனையும் தான் அழகு, நல்ல நூல்களை ஆராய்ந்து கற்று வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லதொரு முகவரியாய் விளங்க வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதுகை பைந்தமிழ்ச்செல்வி ச.பாரதி பேசுகையில், பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல திண்மைமிக்கவர்கள். பெண்கள் அற்புத சக்தி படைத்தவர் என்றார்.ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். சுபலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர். ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவர் கோகிலா நன்றி கூறினார். தமிழாய்வுத்துறை தலைவர் மற்றும் அனைத்து துறைப் பேராசிரியர்களும் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: