திருக்கழுக்குன்றத்தில் ₹2.73 கோடியில் தார் சாலை பணி: பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்

திருக்கழுக்குன்றம், மார்ச் 9: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ₹2 கோடியே 73 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை பணியினை பேருராட்சி தலைவர் யுவராஜ் துவக்கி வைத்தார். திருக்கழுக்குன்றம் பேருராட்சிக்குட்பட்ட ஆசிரியர் நகர், வஊசி நகர், மாதுளங்குப்பம் சாலை, மங்கலம் பெரிய தெரு, குறுக்கு தெரு, ருத்திரான்கோயில் பகுதி, நாவலூர் இருளர் குடியிருப்பு, வடக்கு பட்டு, மேட்டு மங்கலம் இணைப்பு சாலை என மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை மற்றும் சிமென்ட் சாலைகள் உள்ளன. இவற்றை சீரமைக்க, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹2 கோடியே 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலைகளை சீரமைகும் பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தலைமை தாங்கி அனைத்து பணிகளையும் துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் லதா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, பழனி, விஜயகுமார், ரேணுகா தனசேகர் மற்றும் பேரூராட்சி உதவி பொறியாளர் சுபாஷினி, துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், தொழில்நுட்ப உதவி பொறியாளர் முருகப்பெருமான், மற்றும் திமுக நிர்வாகிகள் இளங்கோ, செங்குட்டுவன், நக்கீரன், சீனிவாசன், சுரேஷ், கபிலன், சந்திரசேகர் அன்புமணி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

The post திருக்கழுக்குன்றத்தில் ₹2.73 கோடியில் தார் சாலை பணி: பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: