டிரான்ஸ்பார்மரில் ஆயில் காப்பர் ஒயர் திருட்டு

கிருஷ்ணகிரி, மார்ச் 8: ராயக்கோட்டை மின்வாரிய இளநிலை பொறியாளரான ஏகாம்பரம், ராயக்கோட்டை போலீசில் வழங்கிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ராயக்கோட்டை அடுத்த சின்னகனகம்பட்டி கூட்ரோடு அருகே பயன்பாட்டில் இருந்த டிரான்ஸ்பார்மரில், ₹1.25 லட்சம் மதிப்பிலான 150 கிலோ காப்பர் ஒயர், ₹21 ஆயிரம் மதிப்பிலான 174 லிட்டர் ஆயில் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, காப்பர் ஒயர் மற்றும் ஆயிலை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டிரான்ஸ்பார்மரில் ஆயில் காப்பர் ஒயர் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: