லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த முகமது காசிம் குஜ்ஜார் தீவிரவாதியாக அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய அரசானது முகமது காசிம் குஜ்ஜாரை தீவிரவாதியாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தை சேர்ந்தவன் முகமது காசிம் குஜ்ஜார்(32). தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசித்து வருகிறான். தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன். பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளான்.

இந்நிலையில் முகமது காசிம் குஜ்ஜாரை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசானது தீவிரவாதியாக அறிவித்துள்ளது. தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தீவிரவாதியாக அறிவிக்கப்படும் 57 வது நபர் குஜ்ஜார். இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பதிவில்,‘‘ நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரும் இரக்கமின்றி நடத்தப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த முகமது காசிம் குஜ்ஜார் தீவிரவாதியாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: