இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும், ஆந்திர மாநில கவர்னருமான அப்துல் நசிர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post திருப்பதியில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஆந்திர மாநில கவர்னர் வழங்கினார் appeared first on Dinakaran.