வாக்கு எண்ணிக்கையின்போது விவிபேட் ஒப்புகை சீட்டுகள் 100 சதவீதம் எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்

சென்னை : தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது விவிபேட் ஒப்புகை சீட்டுகள் 100 சதவீதம் எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்று விடுதலைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்த பிறகு திருமாவளவன் அளித்த பேட்டியில்,”மக்களவை தேர்தலில் 100 சதவீத விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சத்ய பிரதா சாகுவிடம் அளித்துள்ளோம். வட இந்திய மாநிலங்களில் இன்றும் மின்னணு எந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் கட்சிகளிடையே உள்ளது.

கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் இரு கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக கோரிக்கை மனுவை சத்யபிரதசாகுவிடம் அளித்துள்ளோம்,”இவ்வாறு பேசினார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் ஆளும் கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜ அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜ ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், ‘400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்’ என்று பிரதமர் மோடியும், பாஜவினரும் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.

The post வாக்கு எண்ணிக்கையின்போது விவிபேட் ஒப்புகை சீட்டுகள் 100 சதவீதம் எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் : திருமாவளவன் appeared first on Dinakaran.

Related Stories: