விஐடி கலை கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள்

ஈரோடு, மார்ச் 7: விஐடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் யுகா-2024 கல்லூரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. விழால் வேளாளர் கல்விக்குழுமங்களின் தாளாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். விஇடி ஐஏஎஸ் முதன்மைக்கல்வி ஆலோசகர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் நல்லசாமி வரவேற்றார். கல்லூரி நிர்வாக அலுவலர் லோகேஷ்குமார் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஹரிஷ்கல்யாண் கலந்துகொண்டார்.

இதில் ஒரே நேரத்தில் வெவ்வேறு அரங்குகளில் திறன் நிகழ்த்துகை, நவீன ஆடை நடைக்காட்சி, சமையல், ஒருநிமிடக் குறும்படம், சாயமிடல், முகச்சாயமிடல், மெஹந்தி, ஒளிப்படம், தனி நடனம், இருவர் நடனம், குழு நடனம், பாடுதல், இசைக்கருவிகள் வாசித்தல், திறன்கள் வெளிப்பாடு மற்றும் பிறகலை போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50 கல்லூரிகளிலிருந்து 1,200 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்த வெற்றியாளர் கோப்பையை சேலம், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றது. மேலாண்மைத்துறை உதவிப் பேராசிரியர் கலைவாணி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.

The post விஐடி கலை கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: