அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பசு, எருமையை தாக்கும் புரூசெல்லோசிஸ் நோய்

அரவக்குறிச்சி, மார்ச் 7: அரவக்குறிச்சி ஒன்றியதில் பசு மற்றும் எருமைகள் வளர்க்கும் விவசாயிகள் நலன் கருதியும், நஷ்டத்திலிருந்து காப்பாற்றும் வகையில் பசு மற்றும் எருமைகளை தாக்கும் புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி ஒன்றியதில் விவசாயத்திற்கு துணைத் தொழிலாக பசு மற்றும் எருமைகளை வளர்த்து தங்கள் வாழ்வாதரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புரூசெல்லோசிஸ் நோய் தாக்குதல் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

புரூசெல்லோசிஸ் என்பது பசு மற்றும் எருமைகளுக்கு கருச்சிதைவு மற்றும் மலட்டு தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது புரூ செல்லா அபார்டஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படு கிறது. இந்தநோயினால் பாதிக்கப்படட கால்நடை களுக்கு தீவிர காய்ச்சலும், சினை ஈன்றும் தருவாயில் (5 முதல் 8 மாத கால கர்ப்பப ருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது. மேலும், இந்த நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினைபிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

தேசிய கால்நடைநோய் தடுப்புதிட்டத்தின் மூல மாக முதன் முறையாக புரூ செல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரு கிறது. இந்த தடுப்பூசியை ஒருமுறைசெலுத்திகொண் டால் அந்த கிடேரி கன்று களுக்கு அதன் ஆயுள் முழுவ தற்குமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும். இந்த தடுப்பூசிதிட்டமானது ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒருமுறை 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்று களுக்கு செலுத்தப்படுகின்றது.
இந்நிலையில் பசு மற்றும் எருமைகள் வளர்க்கும் விவசாயகள் நலன் கருதியும், நஷ்டத்திலிருந்து காப்பாற்றும் வகையில் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பசு மற்றும் எருமைகளை தாக்கும் புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பசு, எருமையை தாக்கும் புரூசெல்லோசிஸ் நோய் appeared first on Dinakaran.

Related Stories: