தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, மார்ச் 6: குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு, சூரம்பட்டி நால் ரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் சி.எம். துளசிமணி தலைமை வகித்தார்.

இதில், விவசாயிகளுக்கு உறுதியளித்தவாறு அவர்களது விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போராடியபோது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயி கரண்சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதி ரூ.37 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும்.

மேகதாது அணை கட்டுமான வரைவறிக்கையை நிராகரித்திட வேண்டும். பாண்டியாறு-புன்னம்புழா இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தென் பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: