மாணவர்களுக்கு முட்டை வழங்காததால் சத்துணவு பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம்: காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு

 

காஞ்சிபுரம்: எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சத்துணவு மையத்தின் சமையலர், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முட்டை மற்றும் சாதத்தினை கரண்டியினை உபயோகிக்காமல் கையினால் எடுத்து பரிமாறி உள்ளார்.

மேலும் மாணவ, மாணவிகள் தட்டில் உணவை வாங்காமல் கையினால் வாங்கி உள்ளனர். மாணவ, மாணவிகளுக்கு வருகைக்கு தகுந்தவாறு முட்டை வேகவைத்து வைக்காமல் இருந்தமையால் சில மாணவ, மாணவிகளுக்கு முட்டை பெறாமல் திரும்பி சென்றுள்ளனர். மேலும், சமைக்கப்பட்டு வழங்கப்படும் உணவினை ருசி பார்த்ததில் உணவு தரமற்ற நிலையில் இருந்துள்ளது.

சத்துணவு மையத்தினையும் தூய்மையாக பராமரிக்கப்படவில்லை என்பதால் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் ஆகியோரை கலெக்டர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இனி வரும் காலங்களில் நமது மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்கள் அரசு வழிகாட்டுதலை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

The post மாணவர்களுக்கு முட்டை வழங்காததால் சத்துணவு பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம்: காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: