பொதுமக்களை மோசடியில் இருந்து பாதுக்காக்க தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு புதிய ஏற்பாடு


சென்னை: பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் தங்கள் படைப்பாற்றல். புதுமை மற்றும் எல்லையற்ற திறமை ஆகியவற்றை வெளிப்படுத்த தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு ரீல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. வழக்கமான கதை சொல்லல் மற்றும் காட்சி வெளிபாட்டின் எல்லைகளைத் தள்ளி பங்கேற்பாளர்கள் தங்கள் படைப்பாற்றனை வெளிப்படுத் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தப் போட்டியில் எப்படி பங்கேற்பது:

பங்கேற்பாளர்கள் 04032024 முதல் வரை 14.03.2024 வரை Google form மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். அனுபவத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் காட்சிக்கதை சொல்லலில் ஆர்வமுள்ள அனைத்து நபர்களும் பதிவு செய்யலாம். பங்கேற்பாளர்கள் தங்களின் ரீல்கள் 30 வினாடிக்குள் நியமிக்கப்பட்ட கருப்பொருளுக்கு ஏற்றவாறு சமர்ப்பிக்க வேண்டும். ரீல்களை Google Driveல் பதிவேற்றம் செய்து அதற்கான Linkஐ
14.03.2024க்குள் Google form பகிர வேண்டும்.

போட்டித் தலைப்புகள்

* ஆன்லைன் கடன் செயலி மோசடி
* ஆன்லைன் திருமண மோசடி
* கூரியர் மோசடி
* சமூக ஊடகங்களில் போலி சுயவிவரம்/ஆள்மாறாட்டம் மோசடி
* ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி

பரிசுகள்:

முதல் பரிசு: ரூ. 25,000, 2வது பரிசு: ரூ.20,000, 3வது பரிசு: ரூ.15,000, 18.03.2024 அன்று நடைபெறும் விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். போட்டி தொடர்பான பிரத்தியேக தகவல்களுக்கு சமூக ஊடகங்களில் எங்களைப் பின் தொடரவும் [@tncybercrimeoff). உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இணைய வழி குற்றங்கள் தொடர்பாக புகாரளிக்க கட்டணமில்லா எண்- 1930.ஐ பயன்படுத்தவும்

The post பொதுமக்களை மோசடியில் இருந்து பாதுக்காக்க தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு புதிய ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: