“சொல்வதெல்லாம் பொய்.. வெறும் வாயில் வடை சுடும் பிரதமர் மோடி…”: 1000 வடைகளை பொதுமக்களுக்கு வழங்கி திமுகவினர் போராட்டம்..!!

பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாக கூறி, அவருக்கு எதிரான திமுகவினர் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். வாயைத் திறந்தாலே வடை வடையாய் சுட்டுத்தள்ளும் பிரதமர் மோடி எனக் கூறி ‘வாயாலே வடை சுடும்’ போராட்டத்தை கோவை, பொள்ளாச்சி திமுகவினர் முன்னெடுத்துள்ளனர். காவி நிற துண்டுடன் பாஜகவினர் போல, பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து கொண்டு பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு வடை வழங்கி, பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என கூறியும் பிரசாரம் செய்தனர்.

The post “சொல்வதெல்லாம் பொய்.. வெறும் வாயில் வடை சுடும் பிரதமர் மோடி…”: 1000 வடைகளை பொதுமக்களுக்கு வழங்கி திமுகவினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: