கொளுத்துது வெயில் நுங்குக்கு மவுசு அதிகரிப்பு இயற்கை பானங்களை நாடும் மக்கள்

தஞ்சாவூர், மார்ச் 5: தஞ்சாவூரில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் நுங்கு போன்ற குளிர்ச்சியான பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள இயற்கை குளிர்பானங்களை நாடி வருகின்றனர்.

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் சாலை ஓர கடைகளில் நுங்கு, இளநீர், தர்பூசணி, வெள்ளரி, கரும்புச்சாறு உள்ளிட்டவைகளின் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. இதில் ஒரு நுங்கு ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாண்டையார் இருப்பு பகுதியில் இருந்து நுங்குகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.

The post கொளுத்துது வெயில் நுங்குக்கு மவுசு அதிகரிப்பு இயற்கை பானங்களை நாடும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: