நோய் அதிகரிப்பு காரணமாக கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையம்: அப்போலோ மருத்துவமனையில் தொடக்கம்

சென்னை: அப்போலோ மருத்துவமனை புதிதாக கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையத்தை தொடங்கி உள்ளது. அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை விரிவாக்கம் செய்து புதிதாக கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையத்தை நேற்று தொடங்கி உள்ளது. மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு (NAFLD) சிகிச்சை வழங்க இந்த கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையம் பெரும் உதவியாக இருக்கும். இதனுடைய தொடக்க நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாத் கலந்து கொண்டு ‘ஃபைப்ரோஸ்கேன் எக்ஸ்பர்ட் 630’ என்ற நோய் கண்டறியும் கருவியை அறிமுகப்படுத்தினார்.

அப்போலோ மருத்துவமனை கல்லீரல் நோய் நிபுணர் டாக்டர் முருகன் கூறுகையில், மாறிவரும் வாழ்க்கை முறை, உடல் உழைப்பு இல்லாத அமர்ந்த நிலையிலான வேலை முறைகள், அதிகரித்து வரும் மன அழுத்தம் போன்றவை காரணமாக கொழுப்பு கல்லீரல் நோய் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. சிறுவயது நபர்கள் 35 முதல் 40 சதவீதம் பேர் கொழுப்பு கல்லீரலைக் கொண்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஃபைப்ரோஸ்கேன் 630 போன்ற தொழில்நுட்பங்கள், கல்லீரல் சேதத்தின் ஆரம்ப அறிகுறிகளை துல்லியமாக மதிப்பிட உதவுகிறது. இதனால் உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.

The post நோய் அதிகரிப்பு காரணமாக கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையம்: அப்போலோ மருத்துவமனையில் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: