சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மனு

 

ஈரோடு, மார்ச் 5: பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் நலச்சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தை தேசிய குடும்பமாக அறிவித்து, அரசு விழாக்களில் முதல் மரியாதை வழங்க வேண்டும்.  சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்காக நலவாரியம் அமைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உதவித் தொகை, அரசு மற்றும் தனியார் மருத்துவ சேவைகள், குடும்ப வாரிசுகள் அனைவருக்கும் தமிழ் நாடு முழுவதும் இலவசப் பேருந்து சேவை வழங்க வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் அவரை சார்ந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்ப வாரிசுகள் அனைவருக்கும் குறைந்தபட்சம் 6 சென்ட் நிலம் இலவசமாக வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மனு appeared first on Dinakaran.

Related Stories: