சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெய்னுக்கு பதிலாக ஜேம்ஸ் பிராங்க்ளின் நியமனம்

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெய்னுக்கு பதிலாக நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் விலகிய நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் பொறுப்பேற்றார்.

ஜேம்ஸ் பிராங்க்ளின் 2001 முதல் 2013 வரை நியூசிலாந்துக்காக 31 டெஸ்ட், 110 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையாடிய பிராங்க்ளின், இதற்கு முன்பு 2011 மற்றும் 2012 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார்.

43 வயதான பிராங்க்ளின், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டர்ஹாம் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் அணி இஸ்லாமாபாத் யுனைடெட் துணைப் பயிற்சியாளராகப் பயிற்சியளித்த அனுபவம் பெற்றவர் ஆவார்.

ஏற்கனவே பேட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மார்ச் 23 அன்று ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோத உள்ளது.

The post சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெய்னுக்கு பதிலாக ஜேம்ஸ் பிராங்க்ளின் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: