நாட்டிற்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டத்தில் 43,442 குழந்தைகளுக்கு போலியோ மருந்து

பெரம்பலூர்,மார்ச்4: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 43,442 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 5 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடை பெற்றது. நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்தார். எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கற்பகம் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது :
இளம்பிள்ளை வாத நோயை, ஒழிக்கும் வகையில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங் களில் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து மையங்களில், சுகாதார பணியாளர்கள், அங்கான் வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 1,548 பேர் போலியோ சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 43,442 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மாலை 5 வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொண்டு, இளம் பிள்ளை வாதநோய் தாக்க த்திலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஆட்மா தலைவர் ஜெகதீசன், நகராட்சி ஆணையர் ராமர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் (பொ) டாக்டர் அஜிதா, நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நாட்டிற்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டத்தில் 43,442 குழந்தைகளுக்கு போலியோ மருந்து appeared first on Dinakaran.

Related Stories: